செளந்தர்யா ரஜினி இரண்டாவது திருமணம் நடக்கவுள்ள இடம் இந்த நட்சத்திர ஓட்டலிலா? – அழைப்பிதழ் மற்றும் புகைப்படம் இதோ

2010-ல் தொழிலதிபர் அஸ்வினைத் திருமணம் செய்தார் ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா. இவர்களுக்கு வேத் என்கிற மகன் உண்டு. செளந்தர்யா – அஷ்வின் இடையே கருத்து வேறுபாடு நிலவியதால், இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரினார்கள். பிறகு இருவருக்கும் விவகாரத்து வழங்கப்பட்டது.

கோவையைச் சேர்ந்த கோவை முன்னாள் எம்எல்ஏ பொன்முடியின் சகோதரரும் தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன் விஷாகன். வஞ்சகர் உலகம் படத்தில் நடித்து அடுத்ததாக சிகப்பு ரோஜாக்கள் 2 படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள விஷாகனுடன் செளந்தர்யா ரஜினிகாந்துக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விஷாகன் ஏற்கெனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். அமெரிக்காவில் எம்பிஏ படித்து தமிழ்நாட்டில் மருந்துகள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதை அடுத்து தற்போது திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 11-ம் தேதி சென்னை எம்ஆர்சி நகரிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் இத்திருமணம் நடைபெற உள்ளது.

சங்கீத், மெஹந்தி உள்ளிட்ட மண விழா நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் ரஜினிகாந்த் வீட்டில் தடபுடலாக நடந்து வருகிறது.  திருமணத்துக்கு முன்னர் போயஸ் கார்டனிலுள்ள அவர்கள் வீட்டில் ஒரு பூஜை விமர்சையாக நடைபெற உள்ளதாம். அதனைத் தொடர்ந்து லதா ரஜினிகாந்த் மற்றும் மணப்பெண்ணின் அக்கா ஐஸ்வர்யா தனுஷ் இருவரும் நெருங்கிய நண்பர்களுக்கும் உறவினர்களும் தனித்தனியாக விருந்தளிக்கவிருக்கிறார்கள்.  இது குறித்து செளந்தர்யா விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!