செளந்தர்யா ரஜினிகாந்த் ஒரு கிராஃபிக் டிசைனர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர். அவர் ஓச்சர் பிக்சர் புரொடக்ஷன்ஸின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் ஆவார். சவுந்தர்யா கிராஃபிக் டிசைனராக படங்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் கோவா திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் கொச்சடயான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் ரஜினி காந்தின் மூத்த மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் கடந்த 2017ல் அஷ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இரு வருடங்களில் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று வாழ்ந்தனர். இதையடுத்து கடந்த வருடம் செளந்தர்யா ரஜினிகாந்த் விசாகன் என்பவரை கடந்த 2019ல் இரண்டாம் மறுமணம் செய்து கொண்டார். பல பிரச்சனைகளை சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்த செளந்தர்யா தற்போது கணவர், மகன் என நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன் தன்னுடைய மகன் வெட் கிருஷ்ணன் பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் தற்போது விசாகன் மகன் வேத் மீது அவ்வளவு பாசம் வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது இன்று விசாகனின் பிறந்தநாளை குடும்பத்துடன் வீட்டிலிருந்தபடியே கொண்டாடியுள்ளனர். புகைப்படத்தை சமுகவலைத்தளத்தில் பகிர்ந்து வாழ்த்துகளை பெற்றுவருகிறார் செளந்தர்யாவின் கணவர்.
#HappyBirthdayVishagan thank you for being you husband ❤️❤️❤️ happy birthday chellam ??? pic.twitter.com/0shgDndc4f
— soundarya rajnikanth (@soundaryaarajni) July 1, 2020