தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழக காவல் துறையிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை முறையாக நடக்கவில்லை என்பதால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. பின்னர் இன்று சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (27). அதே பகுதியைச் சேர்ந்த சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (24) ஆகியோருடன் சேர்ந்து சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி இளம் பெண்களை மடக்கி அவர்களைப் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தி அதனை வீடியோவாக எடுத்துள்ளனர்.

அதைக் கொண்டு அந்தப் பெண்களை மிரட்டி மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததுடன் அவர்களிடம் இருந்து பணம், நகை ஆகியவற்றைப் பறிப்பதைத் தொழிலாகச் செய்து வந்துள்ளனர் இந்தக் கும்பலால் கடந்த 6 ஆண்டுகளில் பொள்ளாச்சியில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் தங்களின் எதிர்காலமே நாசமாகிவிடும் என்ற அச்சத்தில் கடந்த மாதம் வரை எந்தப் பெண்ணும் புகார் தெரிவிக்கவோ, தங்களின் குடும்பத்தினரிடம் பகிரவோ இல்லை. இதனை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்ட இந்தக் கும்பல், தங்கள் நெட்வொர்க்கை விரிவுபடுத்தி பொள்ளாச்சியில் உள்ள அரசியல்வாதிகள் சிலருக்கு வீடியோவில் உள்ள பெண்களை மிரட்டி அவர்களிடம் அனுப்பியுள்ளனர்.
அதற்குக் கைமாறாக அவர்களிடமிருந்து பணம் பெற்றதாகப் புகார் எழுந்தது. பலவருடங்களாக தப்பித்துவந்த இந்த கும்பல் கடந்த மாதம் 24-ம் தேதி பொள்ளாச்சியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவியை கொடுத்த போலீஸ் புகாரின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்ட விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ள. இவர்கள் பல பெண்களை மிரட்டி பாலியல் வல்லுறவு கொண்டுள்ள சுமார் 1500க்கும் மேற்பட்ட வீடியோகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பல அரசியல் தொடர்பால் ஏராளமான வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகம் வலுக்கின்றனது.மேலும் சமீபத்தில் பார் நாகராஜ் இரு பெண்களுடன் நிர்வாணமாக இருக்கும் காட்சி தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன. ஆனால் அதை நாகராஜன் மருத்துவந்தார்.
இதைத்தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரி உள்ளிட்ட 4 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், லேப்டாப்களை சோதனை செய்த போது, அதில் சுமார் 10 விடியோக்கள் மட்டுமே கிடைத்துள்ளன ஆனால் அவர்கள். ஏராளமான பெண்களை மிரட்டி பாலியல் வல்லுறவு கொண்டு பிறகு பணம் வசூலித்து அதை அழித்துள்ளனர்.ஆகையில் அந்த அழிக்கப்பட்ட ஏராளமான விடியோக்களை மீட்டு எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் CBI அதிகாரிகள். இந்நிலையில் அழிக்கப்பட்ட வீடியோக்கள் மீட்கும் பட்சத்தில். முக்கியமான விஐபிக்களின் மகன்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.