செல்ஃபி எடுத்த நபரின் போனை உடைத்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிவகுமார்..!! வைரலாகும் காணொளி

நடிகர் சிவக்குமார் திருமண நிகழ்ச்சி ஒன்றில் செல்ஃபி எடுக்க முயன்ற ஒருவரின் செல்போனை தட்டிவிடுவது போன்ற காட்சிகள் வைரல் ஆகி வருகின்றன. இயக்குனர் மற்றும் எழுத்தாளரான ராமதாஸ் இல்ல திருமண விழாவில் பங்கேற்க சிவக்குமார் சென்று இருந்தார். அங்கு இருந்த நபர் ஒருவர் சிவக்குமாருடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க முயன்றார். முகத்திற்கு நேராக செல்போனை வந்து அந்த நபர் நீட்டிய போது, சிவக்குமார் அதனை தட்டிவிடுவது போன்ற காட்சிகள் வைரல் ஆகி வருகின்றன.

ஏற்கனவே கடந்த ஆண்டு மதுரையில் கடை திறப்பு விழாவிற்கு சென்ற போது செல்பி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவரின் செல்போனை சிவக்குமார் தட்டிவிட்டதால் சர்ச்சை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.