செம்பருத்தி சீரியல் ஆதியின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா? – குவியும் வாழ்த்துக்கள்! நெகிழ்ந்த சின்னத்திரை!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலின் நாயகன் தான் இன்று பல பெண்களின் கனவு நாயகன் என்று கூறலாம்.அளவு ஆதி என்ற கார்த்திகேயன் செம்பருத்தி சீரியலின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.

கார்த்திகேயன் இன்று பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.இதேவேளை, அவரின் பிறந்தநாளை செம்பருத்தி சீரியல் குடும்பமும் சிறப்பாக கொண்டாடியுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

மேலும், கார்த்திகேயன் கனா காணும் காலங்கள் நாடகம் மூலம் தொலைக்காட்சி தொடரில் நடிக்க வந்தார். கனா காணும் காலங்கள் நாடகம் முடிந்தவுடன் அவர் இரண்டு நாடகங்களில் நடித்துள்ளார்.

அதன் பின்னர் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இறுதி போட்டியாளர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார்.அதன் பின்னர் அவர் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது யாசினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அது மட்டும இல்லை, சில வருடங்களில் அவரின் காதல் விவாகரத்தில் முடிந்து விட்டது. மேலும், சில படங்களிலும் ஆதி நடித்துள்ளார். அது மட்டும் இல்லை, செம்பருத்தி நாடகம் ஆதி வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.

பல சோதனைகளையும் தோல்விகளையும் கடந்து தற்போது சாதனையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றார்.இன்று என்னதான் சோதனைகளை கடந்து சென்றாலும் அவரின் காதல் தோல்வி வாழ்க்கையில் மறக்க முடியாத வலி. விவாகத்திற்கு முன்னர் அவரின் மனைவியுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களும் சமூகவலைத்தளத்தில் பரவி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published.