செந்தில் – ராஜலட்சுமி குழந்தைகளா இது? வெளியான குடும்ப புகைப்படம்…

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல கலைஞர்களை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது. அந்த வகையில் பிரபலமானவர்கள் தான் செந்தில்-ராஜலட்சுமி. செந்தில்-ராஜலட்சுமி தனது எளிமையான குரலில் கிராமத்து பாடல்களை பாடி அசத்தி புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்றனர். சூப்பர் சிங்கர் செந்தில் – ராஜலட்சுமி ஜோடி கிராமத்து மண்வாசனையை பாடல்கள் மூலம் உலகறிய செய்தவர்கள்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் செந்தில் தான் டைட்டில் வின்னர் ஆனார். அந்த நிகழ்ச்சியில் பல லட்சம் மதிப்புள்ள ஒரு வீடு வென்றார் செந்தில். செந்தில்-ராஜலக்ஷ்மி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. ஊரடங்கிலும் ரசிகர்களுக்காக புகைப்படங்களை வெளியிட்டு குஷிப்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் ராஜலட்சுமி பயங்கர மேக்கப்பில் மாறிய புகைப்படம் ஒன்றினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

 

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் வீட்டுக்குள் இருப்பது ஒன்றுதான் பாதுகாப்பு என்று அறிவுருத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஊரடங்கில் வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரே பொழுது போக்கான விடயம் என்றால் சமூகவலைத்தளம் தான். தற்போது ரசிகர்கள் செந்தில் ராஜலட்சுமியின் அழகிய குடும்ப புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!