செந்திலின் ஆசையை நிறைவேற்றவே இப்படி மாறினேன்! உண்மையை அம்பலப்படுத்திய ராஜலட்சுமி? வைரலாகும் புகைப்படம் உள்ளே

பிரபல டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் உலகுக்கு அறிமுகமான ஜோடி செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி. இவர்களின் குரல் பல இடங்களில் இன்று ஒலித்துக் கொண்டிருக்கின்றது. அண்மையில் பிரபல டிவியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் மிகவும் மார்டனாக ஆடையணிந்து வந்திருந்தனர். இது குறித்து பிரபல ஊடகம் ஒன்றுக்கு ராஜலட்சுமி கருத்து வெளியிட்டுள்ளனர். மேக்ஓவர் ரவுண்டிற்காக இருவரும் இதுவரைக்கும் போடாத ஆடை குறித்தும், ஆனால் போட்டா நல்லா இருக்கும் என்று நினைக்கும் ஆடை அலங்காரம் தொடர்பிலும் தனித்தனியாக இருவரிடமும் விசாரித்தனர்.

என் மனைவியைச் சேலையிலும், சுடிதாரிலும் பார்த்திருக்கேன். கிறிஸ்டியன் பொண்கள் கல்யாணத்தின் போது அணியும் ஆடை மாதிரி என் மனைவிக்குப் போட்டுப் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை என்று செந்தில் கணேஷ் கூறியுள்ளார். எனக்கும் அவரை ஷர்ட், பேன்ட் போட்டு பார்க்க ஆசை என்று கூறியிருந்தேன். இருவரும் சாதாரணமாக வந்தோம். நிகழ்ச்சியின் போது இருவரையும் அழைத்து அழங்காரம் பண்ணி மேடைக்கு அனுப்பி வைத்தார்கள். இறுதி வரைக்கும் அவர் என்னைப் பார்க்கவே இல்லை.

மேடைக்கு அவர் வந்தத பின்னர் சர்ப்ரைஸா கூட்டிட்டு வந்து மேடையில் நிற்க வைத்தார்கள். என்னைப் பார்த்ததும் பயங்கர அதிர்ச்சியாகி பார்த்து கொண்டே இருந்தார். எனக்கும் அப்படிதான். இதேவேளை, இந்த மாதிரியெல்லாம் நாங்கள் இருவரும் ஆடைகள் அணிவதற்கு வாய்ப்பே இல்லை. இப்படி போடுவோம் என்று கொஞ்சமும் எதிர்பார்க்க வில்லை.

அது இருவருக்கும் மறக்க முடியாத தருணமும் கூட என்று நெகிழ்ச்சியுடன் ராஜலட்சுமி குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த ஆடையில் ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியகவே இருந்துள்ளதுடன், இவர்களின் காதல் இது போல என்றும் இருக்க வேண்டும் என்று வாழ்த்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.