தமிழ் சினிமாவின் முன்னணி நாடிகளில் ஒருவர் நடிகை ஜோதிகா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்துவருகிறார். அஜித்தின் வாலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைனத்தொடர்ந்து குஷி, பேரழகன், சந்திரமுகி, காக்க காக்க போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். அதன்பின்னர் முன்னணி நடிகரான சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் சினிமாவிற்கு இடைவெளி விட்டார். 36 வயதினிலே படத்தின் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி குடுத்தார். அதனைத்தொடர்ந்து மகளிர் மட்டும், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிகை ஜோதிகாவின் மகளின் புகைப்படத்தினை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். ஜோதிகாவின் மூத்த மகள் தியா தற்போது ஜோதிகாவின் உயரம் வளர்ந்து விட்டார்.
ஜோதிகாவின் குடும்பத்தில் சகோதரிகள் மூவரும் நடிகைகள், அதே போல் சூர்யா குடும்பம் பிரபல நட்சத்திர குடும்பம் அப்படியானால் தியாவும் நடிக்க வருவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் தியா பெரிதாக நடிப்பில் நாட்டம் இல்லை என்றும் படிப்பு முடிந்ததும் அவளே முடிவு செய்யட்டும் என ஏற்கனவே சூர்யா ஜோதிகா தம்பதியினர் கூறியுள்ளனர். இந்நிலையில் மிகவும் எளிமையாக இருக்கும் நடிகை ஜோதிகாவின் மகளின் புகைப்படம் இணைத்தில் தீயாய் பரவி வருகின்றது.