சூர்யா- ஜோதிகாவின் குழந்தைகளா இது? இவ்வளவு பெரியவர்களாக வளர்ந்துட்டாங்க!! வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்

ஆங்கில புத்தாண்டை உலக மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள் . இந்நிலையில் பிரபலங்களும் அவர் அவர் வீட்டில் இருந்து புத்தாண்டை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள். பொதுவாக பிரபலங்களின் குழந்தைகளை பற்றி தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகுந்த அக்கறை காட்டுவார்கள். அப்படி அஜித், விஜய் என பல பிரபலங்களின் மகன், மகளை பற்றி நாம் அறிந்திருக்கிறோம்.

அதில் கோலிவுட்டில் நடிகர் சூர்யா ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். அண்மையில் சூர்யாவின் சூரரை போற்று படம் ஓடிடி தளமான அமேசானில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேப்பை பெற்றது. நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகாவை பல வருடங்களாக காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சூர்யா- ஜோதிகா தம்பதியருக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கின்றனர்.

தற்போது நடிகர் சூர்யா தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் நடிகையும், ஜோதிகாவின் அக்காவும் ஆன நக்மா குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் வெளியாக சூர்யாவின் மகள், மகன் எவ்வளவு வளர்ந்துவிட்டார்கள் என ஆச்சரியமாக பார்க்கின்றனர். இதோ அந்த வைரல் புகைப்படம்!!

Leave a Reply

Your email address will not be published.