கணவருடன் பிறந்தநாள் கொண்டாடிய ஜோதிகா! அவரின் செயலைப் பாராட்டி தள்ளும் ரசிகர்கள்- புகைப்படம் இதோ!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஜோதிகா. வாலி திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து குஷி, சந்திரமுகி, பேரழகன், டும் டும் டும், தூள் என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் கதாநாயகியாக பல படங்களில் நடித்துள்ளார். நடிகையாக உச்சத்தில் இருந்த நேரத்தில் நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

அவர் சூர்யாவுடன் ஜோடியாக ஏழு படங்களில் நடித்துள்ளார். ஆனால், இருந்தாலும் 8 வருடம் கழித்து மீண்டும் நடிக்க வந்து அசத்திவிட்டார். ஜோதிகா 36 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்தார். அதன்பின்னர் மகளிர் மட்டும், நாச்சியார், தம்பி, செக்க சிவந்த வானம், காற்றின் மொழி போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகை ஜோதிகா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடும் வேளையில், ரசிகர்கள் அவரைப் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

சமீபத்தில் ஜோதிகா மருத்துவமனை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜோதிகா தஞ்சையில் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையை புதுப்பித்துள்ளார். இன்று ஜோதிகாவின் பிறந்தநாள் என்பதால், இந்த மருத்துவமனையின் புகைப்படத்தினை வெளியிட்டு பாராட்டி வருகின்றனர். தற்போது வரை தனது நடிப்புத்திறமையினால் ஜோதிகா அசத்தி வரும் காட்சிகளையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Jyotika (@jyothikah) on

Leave a Reply

Your email address will not be published.