சூப்பர் ஸ்டார் ரஜினி சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இணையத்தில் வைரலாக்கும் ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினி இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார். சமீபத்தில் படக்குழுவை சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று பரவியதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் ரஜினியும் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், ஹைதராபாத்தில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் அவரின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டு அவர் சென்னை திரும்பினார்.

ஆனால் ரஜினி ஒரு சில செயல்களில் ஈடுபட கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிசம்பர் மாதம் கடைசியில் கட்சி குறித்தும், அரசியல் குறித்தும் அறிவிப்பை வெளியிடுவேன் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது அவர் அரசியலில் இருந்து பின்வாங்கியதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவரின் இந்த அறிவிப்பு ஒரு சிலருக்கு அதிர்ச்சியாகவும், குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.

மேலும் அண்மையில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தனது முடிவை மாற்றிக்கொள்ளாத ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் நீண்ட நாட்களாக ரஜினியின் புகைப்படம் கூட வெளியாகாத நிலையில், தற்போது அவர் வேஷ்டி சட்டையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியகையுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.