சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் அவரது மனைவியும் இணைந்து நடித்த திரைப்படத்தை பார்த்துள்ளீர்களா..? பலரும் பார்த்திடாத காட்சி.. இணையத்தை கலக்கும் வீடியோ!!

நமது தமிழ்த் திரையுலகில் உள்ள திரைப்படத்தில் ஒரு முன்னணி நடிகராக மட்டுமில்லாமல் நமது திரையுலக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் தற்போது வரை கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் நமது ரஜினிகாந்த் அவர்கள். நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் புகழ் மக்கள் செல்வாக்கு என அனைத்தையும் அளவுக்கு அதிகமாக பெற்றும் ஒரு மனிதன் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக வாழ்கிறார் என்றால் அது நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.

தற்போது அவர் இளம் இயக்குனர்கள் உடன் திரைபடத்தில் நடித்து அசத்தி வருகிறார். இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் கபாலி, காலா ஆகிய படங்கள். இந்த திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

மேலும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்டை திரைப்படம் மாஸ் ஹிட்டானது .தற்போது  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பலவகையான திரைப்படங்களில் நடித்து

தற்போது வரை எந்த ஒரு நடிகரும் நெருங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பூ, நயன்தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துவரும் அண்ணாத்த திரைப்படம் தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிப்பார் என்றும் அதன் பின்னர் முழுநேர அரசியலில் தீவிரமாக இறங்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தப் படத்தை இயக்கப் போவதாக வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட இளம் இயக்குனர்களின் பெயர்கள் அடிபடுகிறது இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

நமது தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகர் மட்டும் இல்லாமல் நமது திரையுலகில் ஒரு உச்ச நட்சத்திரமாக தற்போது வரை இருக்க காரணம் யார் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் கேட்டால் அவரது வாழ்க்கைத் துணையான லதா ரஜினிகாந்த் என்று சொல்லலாம் .

சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்த லதா, கல்லூரி பத்திரிகைக்காக ரஜினியை பேட்டி எடுக்க சென்றபோதுதான் அவரை முதன்முதலாக சந்தித்தார். அந்த முதல் சந்திப்பிலேயே லதாவிடம் என்னை மணக்க சம்மதமா என்று ரஜினிகாந்த் கேட்டுள்ளார். அந்த சந்திப்பிற்கு பிறகு உருவான காதல் பின்னர் கல்யாணம் வரை சென்றது .

மேலும் லதா ரஜினிகாந்த் ஒரு பாடகி என்பது அனைவரும் அறிந்த விஷயம். இசை மீதான ஆர்வதால் லதா ரஜினிகாந்த் அவர்கள் பல இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். லதா ரஜினிகாந்த் அவர்கள் நமது சூப்பர் ஸ்டார் உடன் சேர்ந்து படத்திலும் நடித்துள்ளார்.

அவர்களுடன் நடித்த திரைப்படம் தான் சிவகுமார் நடிப்பில் வெளியான அக்னிசாட்சி என்ற படம் அந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவரது மனைவி லதா ரஜினிகாந்த்தும் ஒரு காட்சியில் நடித்துள்ளார். அந்த திரைபடத்தில் ரஜினிகாந்தின் மனைவியாக உண்மையான மனைவி லதா ரஜினிகாந்த் நடித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!