சூப்பர் ஸ்டார் முககவசத்துடன் காரில் ஸ்டைலாக சென்னையை வலம் வருகிறார்..!! வைரலாகும் புகைப்படங்கள்..

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர். இவருக்கு உலகம் முழுதுமே பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. சூப்பர் ஸ்டார் நடித்து வெளியான “தர்பார்” படம் மக்களிடம் வரவேற்பை பெற்றாலும் பெரிதாக ஓடவில்லை என்பது உண்மை ஆனால் நஷ்டம் கேட்டு நிற்கும் வினியோகஸ்தர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் ரஜினி அடுத்த படம் மாபெரும் வெற்றிப்படமாக அமையும் என்று ரசிகர்கள் முதல் விநியோகிஸ்தர்கள் வரை எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

 

ரஜினிகாந்தின் அடுத்த படம் விஸ்வாசம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவா இயக்குகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்தப் படத்திற்கு அண்ணாத்த என்று பெயர் வைத்துள்ளார்கள். விஸ்வாசம் படத்தை பார்த்து ரசித்த ரஜினி இவருடன் ஒரு கமர்சியல் படம் கண்டிப்பாக பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டு நடித்துக் கொண்டிருக்கும் படம்தான் “அண்ணாத்த”. இந்தப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணத்தினால் படப்பிடிப்பு மார்ச் மாதத்திலிருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

இந்த கொரோனா பிரச்சினை முடிந்தவுடன் படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என்று படக்குழுவினரிடம் ரஜினி தெரிவித்ததாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் மதியம் தனது போயஸ் கார்டன் வீட்டிலிருந்து ரஜினிகாந்த் முககவசத்துடன் விலை உயர்ந்த காரான லம்போர்கினி காரில் ஸ்டைலாக வலம் வரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!