சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர். இவருக்கு உலகம் முழுதுமே பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது.சிறுத்தை சிவா இயக்கிய விஸ்வாசம் படத்தை பார்த்து ரசித்த ரஜினி இவருடன் ஒரு கமர்சியல் படம் கண்டிப்பாக பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டு நடித்துக் கொண்டிருக்கும் படம்தான் “அண்ணாத்த”. இந்தப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணத்தினால் படப்பிடிப்பு மார்ச் மாதத்திலிருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் சூப்பஸ்டார் எங்கு சென்றார் என்ற ஒரு கேள்வி இணையத்தில் எழுந்துள்ளது. இதனையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கினாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த அவர், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பாஸ் தேவை என்பது கட்டாயமாக உள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் இளைய மகள் சௌந்தர்யா, மருமகன் விசாகன் மற்றும் பேரன் ஆகியோருடன் சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழித்ததாக கூறப்படுகிறது.
தற்போது இது குறித்த புதிய சர்ச்சை இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதற்கு ரஜனி தரப்பில் இருந்து இதுவரை பதில்கள் எதுவும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்து கார் ஓட்டி செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.