சூப்பர் ஸ்டாரின் படையப்பா படத்தில் நடித்துள்ள ரோபோ ஷங்கர்..! வெளியான தகவல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர். இவருக்கு உலகம் முழுதுமே பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கைகோர்த்து இயக்க வரும் படம் அண்ணாத்த. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிகை குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ், சதீஸ், சூரி என திரையுலக பட்டாளமே ஒன்றிணைந்து நடித்து வருகிறார்கள்.

இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் பல படங்கள் நடித்துள்ளார் ரஜினிகாந்த். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் படையப்பா. 1999ம் ஆண்டு வெளியான இப்படத்தில் ரஜினியை தாண்டி ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா போன்ற நடிகைகளின் நடிப்பும் பேசப்பட்டது.

அதோடு சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த காட்சிகள் இப்போதும் பலரால் மறக்க முடியாது, அதுவே அவருக்கு கடைசி படமாகவும் அமைந்தது. தற்போது இப்படம் குறித்து ஒரு விஷயம் வெளிவந்துள்ளது. அதாவது படத்தில் ரஜினி இடம்பெறும் என் பேரு படையப்பா என்ற பாடலில் ஒரு சில பையில்வான்கள் இடம்பெறும் காட்சியில் நடித்துள்ளாராம். இந்த தகவல் இப்போது ரசிகர்களுக்கு புதிய செய்தியாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.