வெள்ளித்திரையில், சினிமா பிரபலங்களுக்கு அடுத்தபடியாக பலரும் பிரபலமாக காரணமாக இருப்பது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், பங்குபெற்ற இலங்கை பெண் வெற்றி பெறவில்லை என்றாலும் அனைவர் மனதிலும் இடம்பிடித்திருந்தார். சின்மாய் அடிப்படையில் ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர், தற்போது கனடாவின் டொராண்டோவில் வசிக்கிறார். அவர் நிறைய புதிய தமிழ் பாடல்களையும் கற்கத் தொடங்கினார். நடுவர்களிடமிருந்து பெரும் அனைத்து கருத்துகளையும் அவர் நல்ல முறையில் எடுத்துக்கொண்டார்.
தற்போது கனடாவின் இருக்கும் சின்மயி இன்ஸ்டாகிரம் பக்கத்தில் கருப்பு மற்றும் சிவப்பு நிற உடை அணிந்து புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர். இதேவேளை, பேரழகியாக இருக்கும் சின்மயி பாடலில் மட்டும் இல்லை வெள்ளித்திரையிலும் சாதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அது மாத்திரம் இன்றி அவர் பாடிய பாடல் ஒன்று சில தினங்களில் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கு பற்றிய ஈழத்து பெண் சின்மயி அவருடைய இன்ஸ்டாகிரம் பக்கத்தில் அண்மைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும், அவர் வெளியிட்ட டிக் டாக் காட்சிகளையும் இணையத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.