சூப்பர் சிங்கர் நடுவர் சங்கர் மகாதேவனின் மனைவியை பார்த்துள்ளீர்களா..! – அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ..!

சங்கர் மகாதேவன் ஓர் இந்திய திரைப்படப் பின்னணிப் பாடகர்,பாப்பிசைக் கலைஞர் மற்றும் இசையமைப்பாளர். தமிழ் மற்றும் இந்தித் திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ள சங்கர் மகாதேவன், பாலிவுட் திரைப்படங்களுக்கு இசையமைக்கின்ற சங்கர்-எசான்-லாய் மூவர் கூட்டணியின் அங்கமாவார். அவரது குரல் வீச்சிற்காக பெயர்பெற்ற சங்கர் நடப்பு இந்திய பாடகர்களில் ஓர் சிறந்த பாடகராகக் கருதப்படுகிறார்.சங்கர் மகாதேவன் செம்பூர், மும்பையில் ஓர் தமிழ் பேசும் கேரளப் பிராமணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். இளமையிலேயே கர்நாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசையில் பயிற்சி பெற்றார்.

ஐந்து அகவையில் வீணை வாசிக்கும் திறமை பெற்றிருந்தார். காலே காகா என்றழைக்கப்பட்ட சீனிவாச காலேயிடம் இசை பயின்றார்.

பிரபல தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதில் தற்போது சீசன் 8 நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னணி பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், எஸ்.பி.சரண் உள்ளிட்டோர் நடுவர்களாக இருக்கின்றனர்.

அதே போல், இதற்கு முன் நடைபெற்ற சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 7 நிகழ்ச்சியில் நடுவராக இருந்தவர், பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன்.

இவர், ரசிகர்களின் மனதை கவர்ந்த, ‘என்ன சொல்ல போகிறாய்’, ‘மேற்கே மேற்கே’, ‘தாலாட்டும் காற்றே வா’, உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார்.

இந்நிலையில், பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் தனது மனைவியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்…