சூப்பர் சிங்கர் நடுவர் அனுராதாவின் கணவரை பார்த்துள்ளீர்களா..? இந்த பிரபலம் தானா..!! வைரலாகும் புகைப்படம்..

அனுராதா ஸ்ரீராம் அவர்கள் இந்திய  திரைப்பட பின்னணிப் பாடகி மற்றும் கர்நாடக இசைக் கலைஞர் ஆவார். இவர் 90க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் பாடியுள்ளார்.  அனுராதா அவர்கள் தனது 6 வயதிலேயே இசைப் பயிற்சியை தொடங்கி விட்டார். மேலும் இவர் காளி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

அனுராதாஅவர்கள் தன்னுடைய 12 வயதிலேயே இந்தியாவிலுள்ள  பல பகுதிகளிலும், அமெரிக்காவிலும் இசை நிகழ்ச்சிகள் மற்றும் வானொலி,  தொலைக்காட்சிகளில் கச்சேரி செய்துள்ளார்.  அனுராதா ஸ்ரீராம் அவர்கள் தமிழ் திரைப்படத்துறையில் அறிமுகமானார் .

இவர் 1992 ஆம் ஆண்டு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்த மலரோடு மலர் இங்கு என்ற பாம்பே திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமானார். இவர் இந்திரா திரைப்படத்தில் இனி அச்சம் அச்சமில்லை என்ற பாடலை முதன்முதலில் தனித்து  பாடினார்.  அதன்பிறகு இவர் மின்சார கனவு, வாலி, கில்லி , வெற்றிக்கொடிகட்டு, குஷி போன்ற பல முன்னணி நடிகர்களின்  படங்களிலும் இவர் பாடியுள்ளார்.

அனுராதா ஸ்ரீராம் அவர்கள் இவர் தமிழில் சூப்பர் ஹிட்டான கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு மற்றும் லேசா லேசா உள்ளிட்ட பல பாடல்களைப் பாடியுள்ளார். தற்போது அனுராத ஸ்ரீராம் அவர்கள் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரில் நடுவராக பணியாற்றி கொண்டிருக்கிறார். இதன் 8வது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

அனுராதா ஸ்ரீராம் பரசுராம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு லோகேஷ் மற்றும் ஜெயந்த் என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் அனுராதா ஸ்ரீராம் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படம்…