சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலக்ஷ்மி வீட்டில் நடந்த கொண்டாட்டம்… வைரலாகும் புகைப்படங்கள்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல கலைஞர்களை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது. அந்த வகையில் பிரபலமானவர்கள் தான் செந்தில்-ராஜலட்சுமி. நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி ஒட்டுமொத்த தமிழர்களைக் கவர்ந்தவர்கள் தான் ராஜலட்சுமி, செந்தில் தம்பதிகள். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் செந்தில் தான் டைட்டில் வின்னர் ஆனார். கொரோனா காலங்களில் அதிகமாக அரங்கேறிய குடும்ப வன்முறைகளுக்கு இவர்கள் கொடுத்திருந்த பேட்டி அனைவராலும் பேசப்பட்டு வந்தது.

கணவர்களுக்கும் மனைவிகளுக்கு அதிகமான சண்டை அரங்கேறி வருவதை ஒரே வார்த்தையில் விட்டுக்கொடுத்து சொன்றால் சண்டை என்பதே இல்லை என்று கூறினார்கள். இந்நிலையில் தற்போது பிரபல ரிவியில் சூப்பர்சிங்கர் சேம்பியன் ஆப் சேம்பியன்ஸ் நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொள்கின்றனர். அவ்வப்போது தனது சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இந்த தம்பதிகள் தற்போது பயங்கர மாடர்னாக மாறி அசத்தி வருகின்றனர். எப்பொழுதும் புடவையில் அசத்தும் ராஜலட்சுமியை மாடர்னாக அவதானித்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து செந்தில் தனது தங்கையின் பிறந்தநாளை மிக விமர்சையாக கொண்டாடிய புகைப்படம் வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதோடு, செந்திலும் வேஷ்டி சட்டையிலிருந்து மாடர்னாக மாறிய புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதே வேளை செந்திலின் தங்கையினை வாழ்த்திய ரசிகர்கள், வடிவேல் பாலாஜியின் மரணத்திற்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்காதது ஏன் என்றும் விளாசி வருகின்றனர்.

https://www.facebook.com/senthilganeshofficial/posts/2841993189382095

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!