சூப்பர் சிங்கர் செந்தில், ராஜலட்சுமிக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகர் அஜித்! ஆச்சரியத்தில் ரசிகர்கள் ! முழு விவரம் உள்ளே!

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பலரையும் கவர்ந்தவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜலட்சுமி. இவரும் இவரது கணவர் செந்தில் கணேஷும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடி வந்தார்கள். நாட்டுபுற பாடல்கள் தான் இவர்களது ஸ்பெஷல்.

இணையதளத்திலும் சரி, சமூக வலைதளங்களிலும் சரி இவர்கள் பாடல் ஒலிக்காத இடமே இல்லை. அந்த அளவுக்கு இவர்கள் பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவிவந்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து தானே பல பாடல்களை இயற்றிவந்துள்ளனர். கிராமியப் பாடல்கள் தான் தமிழர்களின் அடையாளம். கிராமியப் பாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவரும் நிலையில் தற்போது விஜய் டிவி-யில் கிராமியப் பாடல்களை மட்டுமே பாடி அசத்தி வந்தவர்கள் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி ஜோடி.

இன்னிலையில் செந்தில், ராஜலட்சுமிக்கு நடிகர் அஜித் படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.விஸ்வாசம் இப்படத்தின் பாடல்கள் ட்ராக் லிஸ்ட் வெளிவந்தது. அந்த ட்ராக் லிஸ்டில் டங்கா டங்கா என்ற பாடலை சூப்பர் சிங்கர் புகழ் செந்தில், ராஜலட்சுமி பாடியுள்ளனர்.

 

இந்த பாடலில் கிராமிய மணம் வீசும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். இதேவேளை, வளர்ந்து வரும் அவர்களுக்கு அஜித் படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தமையால் இன்ப அதிர்ச்சியில் உள்ளார்களாம்.மேலும், இதற்கு முன்னர் நடிகர் பிரபுதேவாவின் படத்திற்கும் பாடல் ஒன்று பாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.