சமீப நாட்களாக இணையதளங்களில் பல சர்ச்சைகள் வெளிவந்துகொண்டே தான் இருக்கிறது. எடுத்துக்காட்டாக கிரிக்கெட் வீரர் பும்ராஹ் மற்றும் நடிகை அனுபமா அவர்கள் விஷயம் போன்று தற்போது ஒரு விஷயம் நடந்து வருகிறது.. ரஜினிகாந்த் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் தர்பார் படத்தில் வில்லனாக நடித்து இருப்பவர் பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி. அவருடைய மகள் ஆதியா ஷெட்டியை, இந்திய கிரிக்கெட் அணி வீரர் கேஎல் ராகுல் காதலித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் காதலிப்பதாக அவ்வப்போது கிசுகிசு வலம் வந்த நிலையில், இடையே ராகுல் அதை மறுத்தார். ஆதியா ஷெட்டியும் இந்த விஷயத்தில் மௌனம் காத்தார். எனினும், இரு நாட்கள் முன்பு விமான நிலையத்தில் ராகுல் – ஆதியா ஷெட்டி ஒன்றாக செல்லும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. ராகுல் மறுத்தது உண்மையா? அப்படி என்றால் இது என்ன? என கேள்வி எழுப்பின பாலிவுட் பத்திரிக்கைகள்.
சில நாட்களாக இருவரும் சமூக வலைதளங்களில் தங்கள் காதல் பற்றி வெளியே தெரியாமல் அமைதி காத்த நிலையில், ராகுல் திடீரென ஆதியா ஷெட்டியுடன் இருக்கும் வேடிக்கையான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் விளையாடக இருந்தாலும் ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.