சூப்பர்சிங்கர் ராஜலட்சுமியா இது..! இவ்வளவு மாடர்னாக மாறிட்டாரே! அதிர்ச்சியில் நடுவர்கள்..

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல கலைஞர்களை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது. அந்த வகையில் பிரபலமானவர்கள் தான் செந்தில்-ராஜலட்சுமி. நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி ஒட்டுமொத்த தமிழர்களைக் கவர்ந்தவர்கள் தான் ராஜலட்சுமி, செந்தில் தம்பதிகள். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்றனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் செந்தில் தான் டைட்டில் வின்னர் ஆனார். அந்த நிகழ்ச்சியில் பல லட்சம் மதிப்புள்ள ஒரு வீடு வென்றார் செந்தில். செந்தில்-ராஜலக்ஷ்மி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

கொரோனா காலங்களில் அதிகமாக அரங்கேறிய குடும்ப வன்முறைகளுக்கு இவர்கள் கொடுத்திருந்த பேட்டி அனைவராலும் பேசப்பட்டு வந்தது. ஆம் இவர்கள் எப்பொழுதும் பிரியாமல் ஒன்றாக இருந்துவருவதாகவும், தங்களுக்குள் சண்டை என்று வந்ததே இல்லை என்றும் இந்த லாக்டவுன் காலத்தில் வீட்டோடு இருக்கும் கணவர்களுக்கும் மனைவிகளுக்கு அதிகமான சண்டை அரங்கேறி வருவதை ஒரே வார்த்தையில் விட்டுக்கொடுத்து சொன்றால் சண்டை என்பதே இல்லை என்று கூறினார்கள்.

இந்நிலையில் தற்போது பிரபல ரிவியில் சூப்பர்சிங்கர் சேம்பியன் ஆப் சேம்பியன்ஸ் நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொள்கின்றனர். இதில் பயங்கர மாடர்னாக ராஜலட்சுமி வந்துள்ளதை அவதானித்த நடுவர்கள் ஒருநிமிடம் அதிர்ச்சியில் வாய்திறந்த காணொளியினை இங்கு காணலாம்.

Leave a Reply

Your email address will not be published.