சூடுபிடிக்கும் பிக்பாஸ் வீடு! சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு போட்டியாளர்கள்..! வருத்தத்தில் ரசிகர்கள்..

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. வழக்கம் போல் ஆட்டம் பாட்டம் என கலப்பாக இல்லாமல் நாளுக்கு நாள் சண்டை சச்சரவுகள் பிக் பாஸ் வீட்டில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தினம்தோறும் வெளியாகி வரும் ப்ரோமோக்களும் ஆர்வத்தை தூண்டி வருகிறது. அண்மையில் இந்த நிகழ்ச்சியின் 17வது போட்டியாளராக தொகுப்பாளினி அர்ச்சனா வந்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனாவின் வரவால் கலப்பாக மாறியுள்ளது.

தொகுப்பாளினி அர்ச்சனா வீட்டிற்கு வந்ததுமே சுரேஷ் சக்ரவத்தி அவர்களை கலாய்த்து பல கலாட்டாக்களை செய்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று இரண்டு போட்டியாளர்களை சிறையில் அடைத்துள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. ஏதாவது டாஸ்க்கில் பின்தங்கியவர்களை சிறையில் அடைப்பது வழக்கமாக வைத்துள்ள நிலையில், தற்போது நிகழ்ச்சி ஆரம்பித்த பத்து நாளில் இரண்டு போட்டியாளர்களை அடைத்துள்ளது ஒட்டுமொத்த போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் சுவாரசியம் குறைவாக இருக்கும் போட்டியாளர்கள் பெயரில் ஜித்தன் ரமேஷ், ஷிவானி இரண்டு பேரும் தெரிவு செய்யப்பட்டு தனி அறையில் இவர்களையே சிறையில் அடைத்துள்ளனர். இப்போது வெளிவந்துள்ள இந்த புரொமோ ஷிவானி ரசிகர்களுக்கு கொஞ்சம் சோகத்தை அளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.