கொரோனா என்ற பெரிய போராட்டத்திற்கு நடுவில் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய பேச்சு தான் மக்களிடம் அதிகம். கடந்த மூன்று சீன்களை போலவே இந்த பிக் பாஸ் சீசன் 4 உலகநாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். இதில் ரியோ ராஜ், நடிகை ரேகா, செய்தி வாசிப்பாளர் அனிதா, சீரியல் நடிகர் ஷிவானி, பின்னணி பாடகர் வேல் முருகன், மாடல் சனம் ஷெட்டி, ஆஜித், நடிகர் ஆரி என மொத்தம் 16 பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

ரசிகர்கள் எதிர்ப்பார்த்த பிரபலங்கள் நிகழ்ச்சியில் இருப்பதால் அவர்களுக்கு கொண்டாட்டம் தான். பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இதுவரை போட்டியாளர்கள் 3 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் கழித்துள்ளனர். தற்போது, கொஞ்சம் கொஞ்சமாக போட்டியாளர்களை பற்றிய உண்மை குணம் வெளியே வர தொடங்கியுள்ளது.
மேலும், இந்த வார பிக் பாஸ் வீட்டின் தலைவராக ரம்யா பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று வெளியான முதல் ப்ரோமோவில், தங்களுக்கு நடந்த அனுபவங்களை கூறிய போட்டியாளர்களில் இருந்து முதல் நான்கு நபர்களான ரேகா, கேப்ரில்லா, சனம் மற்றும் சம்யுக்தாவை அடுத்த வார நாமினேஷனுக்கு தேர்ந்தெடுத்துள்ளனர்.
#Day3 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTv pic.twitter.com/aH3CYjZalB
— Vijay Television (@vijaytelevision) October 7, 2020