சுஷாந்த் வங்கிக்கணக்கின் பரபரப்பு தகவல்! 4 மாதத்தில் பல கோடி செலவு செய்த முன்னாள் காதலி… அவிழும் பல உண்மைகள்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் தன்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சுஷாந்த் சிங் ராஜ்புட் தந்தை கேகே சிங், பாட்னா பொலிசாரிடம் தனது மகனின் முன்னாள் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி உட்பட ஐந்து பேர் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

தனது மகனின் வங்கி கணக்கில் இருந்த பணம் 15 கோடியை இவர்கள் அனைவரும் கடந்த ஒரு ஆண்டில் பயன்படுத்தியதாக புகாரளித்திருந்தார். அதே போல, தனது மகனின் மரணம் தற்கொலை இல்லை என்றும் திட்டம் போட்டு என் மகனுக்கு துரோகம் செய்து விட்டனர் என்றும் தெரிவித்துள்ளார். இதனால், சுஷாந்தின் முன்னாள் காதலியும் நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மீது எதிர்ப்பு வலுக்கும் நிலையில், தற்போது வெளியான தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சுஷாந்த் சிங் வங்கி கணக்கு தொடர்பாக, பிரபல ரிவி அதிரடி ஆதாரத்தை வெளியிட்டுள்ளது. அதாவது, கோடிக்கணக்கான ரூபாய் சுஷாந்த் சிங் கணக்கிலிருந்து தனது முன்னாள் காதலி ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஷோவிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. சுஷாந்த் சிங் வங்கி கணக்கு தொடர்பான தகவல் மேலும் பரபரப்பை கிளப்பி வருகின்றது.

 

Leave a Reply

Your email address will not be published.