சுஷாந்த் சிங் 1 மாதத்திலேயே 50 சிம் கார்டு மாத்திருக்காரு…மரணத்தின் மர்மத்தை உடைக்கும் நடிகர்!

சுஷாந்த் சிங் ராஜ்புத் ஒரு இந்திய நடிகர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தன்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்து வரும் போலீசார் இதுதொடர்பாக சுஷாந்த் சிங்கின் காதலி உட்பட சுமார் 30 பேருக்கும் அதிகமானோரை விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

எனினும் அவர் என்ன காரணத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. இந்தநிலையில் பாலிவுட் நடிகர் சேகர் சுமன் சுஷாந்த் சிங் ஒரே மாதத்தில் 50 முறை சிம்கார்டை மாற்றியதாக பரபரப்பு கிளப்பியுள்ளார். இதைப்பற்றி, சேகர் சுமன் கூறுகையில், ” சுஷாந்த் தற்கொலைக்கு பின்னால் மிகப்பெரிய சதி இருக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.  அவர் ஏன் அப்படி செய்தார்? யாரை தவிர்க்க அவ்வாறு செய்தார்?

பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் குடும்பத்தாரை சந்தித்து பேசியிருக்க வேண்டும்.  ஆனால் கோவிட் 19 பிரச்சனையால் நிதிஷ் குமார் யாரையும் சந்திப்பது இல்லை என்றார்கள்.  அதே நேரம் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மகாராஷ்டிரா மாநில முதல்வரை தொடர்பு கொண்டு சுஷாந்தின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிக்கை விடுக்க வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.