இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பொங்கல் ரிலீசான படம் பேட்ட. இப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகி இன்று வரை ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இதுவரை 6,184,076 தடவை இந்த வீடியோ பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த என்று பதிவிட்டு குறித்த சிங்கிள் ட்ராக் வீடியோவை பகிர்ந்தார். இந்நிலையில், இந்தபாடலுக்கு 11 மாத குழந்தை ஒருவர் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து அந்த குழந்தையின் அம்மா, என்னுடைய 11 மாத குழந்தை மரண மாஸ் பாடலுக்கு ஆடுகிறது,” என தெரிவித்துள்ளார். இதேபோல மற்றுமொரு சிறுவனும் இந்த மரணமாஸ் பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.
11month babeee dance fr #MaranaMass tnq fr mkng my babeeee dance still more I’m waiting @anirudhofficial fr 2 one @rajinikanth sir and @karthiksubbaraj @sunpictures maranaaaaa masssssssss,😍 pic.twitter.com/SQHnYmouoe
— sukanya jagadish (@Sukanyaj30) December 4, 2018