‘சுந்தர பாண்டியன்’ பட நடிகருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..! மகிழ்ச்சியில் அவரே வெளியிட்டுள்ள புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் தற்போது அதிகமான படங்கள் திரைக்கு வருகின்றன என்று தான் சொல்ல வேண்டும், அதே போல நடிகர் நடிகைகளின் அறிமுகம் அதிகமாக உள்ளது என்று சொல்லலாம். மேலும், ஒரே படத்தில் மக்களிடத்தில் ஒரு சில அறிமுக நடிகர்கள் பிரபலமாகி விடுகிறார்கள். இந்நிலையில், தமிழ் சினிமாவில், குணச்சித்திர நடிகராக நடித்து வருபவர் தான் நடிகர் சௌந்தரராஜா.

இவர் சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில், ஜகமே தந்திரம் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், நடிகர் சௌந்தரராஜா, தமன்னா என்பவரை 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், தற்போது இந்த தம்பதிக்கு, இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. மேலும், இந்த குழந்தைகள் தினத்தில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது என்றார் நடிகர் சௌந்தரராஜா. அதோடு, மண்ணுக்கும் மக்களுக்கும் அதிக மதிப்பு கொடுக்கும் சௌந்தர ராஜா, இன்று பிறந்த தன் மகளுக்கு மரக்கன்று ஒன்றை பரிசாக அளித்தார்.