சீறி வந்து பிடித்த பாம்பு! நிஞ்சா ஸ்டைலில் எட்டி உதைத்து தப்பிய வீர எலி! வைரலாகும் அறிய காணொளி

அரிசோனா: அமெரிக்காவில், பாம்பையே எட்டி உதைத்துவிட்டு, எலி ஒன்று தப்பியோடிய வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பாலைவன உயிரின சூழலை, பலரும் ஆய்வு செய்வது வழக்கமாகும். இதன்படி, சான்டியாகோ ஸ்டேட் யுனிவர்சிட்டி, யுனிவர்சிட்டி ஆஃப் கலிஃபோர்னியா ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு , நள்ளிரவு நேரத்தில், அரிசோனா பாலைவனத்தில் நடக்கும் நிகழ்வுகளை, வீடியோவாக பதிவு செய்து வந்தனர். இதில், ஒரு வியப்பான காட்சி ஒன்று பதிவாகியுள்ளது. ஆம். சுருட்டை பாம்பு ஒன்று, நீண்ட நேரமாக, புதரில் பதுங்கியிருந்து, எலி ஒன்றை பிடித்து,

முழுங்க முயற்சித்தபோது நடந்த சம்பவம்தான் அந்த சுவாரசியமான வீடியோ காட்சி. வாயை அகலமாக திறந்தபடி, சுருட்டை பாம்பு, மின்னல் வேகத்தில் பாய, உடனே சுதாரித்துக் கொண்ட எலி, அந்த பாம்பின் தலையை எட்டி உதைத்துவிட்டு, அங்கிருந்து ஓடியது.

இந்த காட்சியை, விடியற்காலையில் மறு ஒளிபரப்பு செய்து பார்த்த, ஆய்வாளர்கள் மிகவும் வியப்படைந்தனர். எலியின் அந்த உதை, கிட்டத்தட்ட நிஞ்சா தாக்குதல் போல இருந்ததாகக் குறிப்பிடும் அவர்கள்,

இதனை உடனே சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். இதையடுத்து, இந்த வீடியோ தற்போது வைரலாக, ஷேர் செய்யப்பட்டு வருகிறது. வைரலாகும்  அந்த வீடியோ பதிவு இதோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!