சீரியல் நடிகை ஆலியா மானசாவா இது! இவ்வளவு ஒல்லியா அழகாக ஆகிவிட்டாரே! வைரலாகும் டிக் டாக் வீடியோ..

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் ஆலியா அதே சீரியலில் ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை இவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. தற்போது சஞ்சீவ் காற்றின் மொழி என்ற தொடரில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

ஆலியா சிறுது காலம் சினிமாவில் நடிக்காமல் இடைவெளி விட்டிருந்தார். ஆலியா தற்போது பிரபல தொலைக்காட்சியில் புதியதாக தொடங்கவுள்ள ஒரு சீரியலில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகின. குழந்தை பிறந்த பிறகு மிகவும் ஒல்லியாக ஆகிவிட்டார் ஆலியா மானசா. குழந்தை பிறந்து சில மாதங்களே ஆன நிலையில் நடிகை ஆலியா மானசா மீண்டும் தனது பழைய வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்.

ஆலியாவுக்கு குழந்தை பிறந்த பிறகு மிக விரைவாக உடல் எடையையும் குறைத்திருந்தார். எனவே தனது ஸ்லிம் லுக்கை போட்டோ ஷாட் எடுத்து புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது மீண்டும் படப்பிடிப்புகளுக்கு செல்ல ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், டிக் டாக் செய்து வெளியிட்டுள்ளார். குறித்த காட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

 

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *