சீரியல் நடிகர் டிங்குவை நியாபகம் இருக்கா…? இரண்டாவது திருமணம் செய்து இப்போ அடையாளமே தெரியாமல் மாறிற்றாரே : புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

தமிழில் சின்னத்திரையில் 90களில் கலக்கிய பிரபலங்கள் நிறைய பேர் உள்ளனர். அதில் சிலர் இப்போதும் சீரியல்கள், படங்கள் என நடித்து வருகிறார்கள். ஆனால் நாம் பார்த்து பழகிய நிறைய பிரபலங்கள் கேமரா பக்கம் வராமல் செட்டில் ஆகிவிட்டனர். அப்படி நமக்கு எல்லாம் நன்கு பரீட்சயப்பட்ட ஒரு நடிகர் என்றால் அது டிங்கு தான்.

இவரை ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பே இல்லை, சீரியலை தாண்டி நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்றிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் இவர் சீரியல் நடிகை ப்ரீத்தியுடன் இணைந்து நடனம் ஆடி இருந்தார்.

அதன்பிறகு இரண்டாவது திருமணம் செய்த டிங்கு சினிமா பக்கமே காணவில்லை. இந்த நிலையில் சீரியல் நடிகை சோனியா, டிங்குவிற்கு திருமண வாழ்த்து கூறி அவரது தற்போதைய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.அதைப்பார்த்த ரசிகர்கள் அட நடிகர் டிங்குவா இது அடையாளமே தெரியலையே என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.