சீரியலில் களமிறங்குகின்றாரா எஸ்.ஜே.சூர்யா? பிரபல டிவி சீரியல் ஷூட்டிங் செட்டில் இருந்து லீக்கான புகைப்படம்… கடும் குழப்பத்தில் ரசிகர்கள்

தற்போது பொழுதுபோக்கு நிகழ்சிகளில் சினிமாவை விட சின்னத்திரையின் ஆதிக்கம் அதிகம் என்றே கூறலாம். வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்தால் கூட மக்கள் அடையாளம் கண்டுகொள்ள மாட்டார்கள் போல ஆனால் சின்னத்திரையில் எதாவது ஒரு சீரியலிலோ நடித்திருந்தால் போதும் மக்கள் மனதில் எளிதில் இடம் பிடித்து விடலாம்.

இப்படி இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பலரும் இப்படி சின்னத்திரையில் இருந்து வந்தவர்கள் தான் என்றுசொன்னால் யாரும் மறுக்கமாட்டார்கள்.இப்படி வெகு காலமாக காமெடி நடிகர்களையும், நடிகர்களையும் மட்டுமே அறிமுகப்படுத்திய இந்த சின்னத்திரை போக போக பல நடிகைகளும் சின்னத்திரையின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்கள்.

ராஜா ராணியின் செட்களில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா இருக்கும் வைரல் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.குறிப்பாக இந்த சீரியலில் அர்ச்சனாவாக நடிக்கும் விஜே அர்ச்சனாவுடன் எஸ்.ஜே.சூர்யா இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் எஸ்.ஜே.சூர்யா சீரியலில் நடிக்கின்றாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.அண்மையில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில், நெஞ்சம் மறக்க முடியாத அசுர நடிப்பால்,

அனைவர் நெஞ்சத்தையும் அள்ளிய எஸ்.ஜே.சூர்யா, அடுத்ததாக பொம்மை, சிலம்பரசன் நடிக்கும் மாநாடு, மற்றும் சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தான் ராஜா ராணி சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எஸ்.ஜே.சூர்யா இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.