சீயான் விக்ரமின் மனைவி யாரு தெரியுமா? இணையத்தில் வைரலாகும் அரிய புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் உச்சக்கட்ட நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் சீயான் விக்ரம். இவரின் நடிப்புக்கே தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிக்க தொடங்கி ஒன்பது வருடங்களுக்குப் பின் வெளிவந்த சேது என்னும் படத்தின் மூலம் திரையுலக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார்.

இப்படமே இவரின் திரை வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது. இந்த வெற்றிக்குப் பின் தில், ஜெமினி, தூள், சாமி போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார் தற்போது கோப்ரா படத்தில் நடித்துகொண்டிருக்கிறார். இந்நிலையில், இதுவரை அனைத்து ரசிகர்களும் விக்ரமின் மகன் துருவ் மற்றும் மகள் புகைப்படங்களை பார்த்திருக்கிறோம். ஆனால் பெரும்பாலானோர் விக்ரமின் மனைவியை பார்த்திருக்க மாட்டார்கள்.

விக்ரம் மனைவியின் பெயர் சைலஜா பாலகிருஷ்ணன். மேலும், சைலஜா சென்னையில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் சைக்காலஜி ஆசிரியராக வேலை செய்து வருகிறாராம். துருவ் மற்றும் விக்ரமின் மகள் அக்ஷிதா ஆகிய இருவருடனும் சைலஜா விளையாடும் புகைப்படம் ஒன்றை நெட்டிசன்கள் தேடி கண்டுபிடித்து சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *