சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தின் முதல் சிங்கள் அப்டேட் வெளியானது, விடியோவுடன் இதோ..

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் தனது நடிப்பால் ரசிக்க வைத்தவர் சிவகார்த்திகேயன். இவர் ஒரு திரைப்பட நடிகர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தனது தனித் திறமையால், தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைத்து பிரியாங்க அருள் மோகன், யோகி பாபு, வைபவ் என பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் கூட்டணியில் வரும் பாடல்கள் செம ஹிட்டாகும் என்பது அனைவரும் அறிந்ததாகும்.

இந்நிலையில் தற்போது டாக்டர் திரைப்படத்தின் முதல் சிங்கிள் ஆன செல்லமே பாடல் வரும் ஜூலை 16 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் சிவகார்த்திகேயன், அனிருத் மற்றும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இணைத்து நடித்துள்ள வீடியோவில் இதனை அறிவித்துள்ளனர். இதோ அந்த வீடியோ…

 

 

Leave a Reply

Your email address will not be published.