சிறுவயதில் இருந்து தளபதி விஜயின் மௌனத்துக்கு காரணமான…! புகைப்படம் இதோ..?

நடிகர் விஜய் தனது தங்கை மற்றும் அம்மாவுடன் குழந்தை பருவத்தில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விஜய்யின் தங்கை சிறுவயதிலேயே இறந்து விட்டதால் அவரது ரசிகர்கள் சோகமான கருத்துக்களுடன் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர். விஜயின் தங்கை வித்யா சந்திரசேகர் இரண்டு வயதிலேயே இறந்துவிட்டார். விஜய் சிறுவயதில் மிக கலகலவென செம்ம ஆக்டிவாக எல்லோரிடமும் சிரித்து கொண்டே பழகக்கூடியவர். தனது தங்கை இறந்த பிறகு அவர் மிகவும் அமைதியாகி விட்டார்.

2005ம் ஆண்டு இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் சுக்கிரன் படத்தை இயக்கி தயாரித்தார். அதில் வித்யாவின் கதையும் சித்தரிக்கப்பட்டிருந்தது. அந்த படத்தில் நடிகர் விஜய் வக்கீலாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.

 

Leave a Reply

Your email address will not be published.