சிறுவன் மீது தாயைப் போல் பாசம்வைத்த மாடு..! பாடாய்படுத்தும் சிறுவன்..! மாடோட ரியாக்சனைப் பாருங்களேன்..!

மாடுகளை வீட்டின் பின்வாசலில் கட்டி வைக்கும் விவசாயிகள் பலரையும் பார்த்திருப்போம். ‘’ஆடு, மாடு மேல உள்ள பாசம் வீட்டு ரேசன்கார்டில் பேரை சேர்க்க கேட்கும்” என சிவாஜி திரைப்படத்தின் பல்லேலக்கா பாடலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாடும் பாடலைப் போலவே நிஜத்தில் ஒரு குடும்பம் இருக்கிறது என்றால் ஆச்சர்யம் தானே?

தன் வீட்டு செல்ல நாய்க்குட்டியோடு நெருக்கமாக இருக்கும் குழந்தைகளைப் போல மூன்றுவயதுகூட நிரம்பாத சிறுவன் ஒருவன் வீட்டு புழக்கடையில் இருக்கும் தன் வீட்டு மாட்டோடு நெருக்கமாக இருக்கும் வீடியோ, அதிலும் அந்த மாட்டை போட்டு இம்சித்து..அன்பால் ஆட்டுவிக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. குறித்த அந்தக் காட்சியில் ஒரு சிறுவன் தன் வீட்டு பின்னால் நிற்கும் தான் வளர்க்கும் மாட்டோடு ரொம்பவும் நெருக்கமாக இருக்கிறான்.

அதிலும் அந்த மாட்டை தலையைப் பிடித்து ஆட்டுவது தொடங்கி, அதன் மேல் படுத்து உறங்குவது வரை பொடியன் அசால்டாக டீல் செய்கிறான். அதைப் பார்த்தால் நம்மையும் அறியாமல் ஆச்சர்யத்தில் மூழ்கிப் போகிறோம். மாடு, ஏதோ கன்றுகுட்டியோடு இருப்பது போல் அந்த சிறுவன் செய்வதற்கு எல்லாம் ஒத்துழைப்பு செய்து இருக்கிறது. பாசம் மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல. ஐந்தறிவு மட்டுமே படைத்த மிருகங்களுக்கும் அது உண்டு என்பதை மெய்ப்பிப்பதுபோல் இந்த வீடியோ உள்ளது. இதோ நீங்களே பாருங்களேன்.

Leave a Reply

Your email address will not be published.