சிரிப்பழகி ’லைலா’ இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? வைரலாகும் குடும்ப புகைப்படம்…

நடிகை லைலா குறைந்தபட்ச திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் மிக விரைவாக ரசிகர் மனதில் இடம் பிடித்தார். கள்ளழகர் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை லைலா. இந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரம் உள்ள திரைப்படத்தில் நடித்ததன் மூலம் எளிதில் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார். உன் சமையலறையில் உப்பா சர்க்கரையா? என சீயான் விக்ரமோடு சேர்ந்து மிகச்சிறந்த நடிப்பை வழங்கிய வகையில் ஏராளமான ரசிகர்களையும் பெற்றிருந்தார் லைலா.

பிதாமகன் படத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. இதேபோல் தல அல்டிமேட் ஸ்டார் அஜித்க்கு ஜோடியாக ‘தீனா’ படத்தில் செம நடிப்பை வழங்கியிருப்பார் லைலா. சினிமாவில் பிஸியாக இருந்த போதே, கடந்த 2006ம் ஆண்டு மே மாதம், ஈரான் நாட்டு தொழிலதிபரான மெஹெதீன் என்பவரை கல்யாணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். அதன் பின்னர் தனது சினிமா கேரியருக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை லைலா. அதன் பின்னர் இப்போது சில விளம்பரங்களில் தோன்றுகிறார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருக்கிறார்.

இப்போது நடிகை லைலா தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தோளுக்கு மேல் வளர்ந்திருக்கும் மகன்கள், கணவரோடு இருக்கும் புகைப்படத்தை நீண்ட காலத்துக்கு பின்பு சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருக்கிரார் நடிகை லைலா. அதைப்பார்த்த ரசிகர்கள் லைலாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? என ஆச்சர்யத்தோடு கமெண்ட் செய்துவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.