சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த முன்னணி நடிகை.. வெளியான தகவல்- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

நடிகர் சிம்பு இந்த வருடம் அவரது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷத்தை கொடுத்து வருகிறார். இந்த லாக்டவுனை பயன்படுத்தி உடல் எடை குறைத்து பழையபடி உள்ளார். எல்லா சமூக வலைதளங்களிலும் மீண்டும் வந்தது எல்லம் வைரலாக பேசப்பட்டது. அதோடு அடுத்தடுத்து ஈஸ்வரன், மாநாடு என படப்பிடிப்புகளை முழுமையாக முடித்தார். அண்மையில் அவர் பத்த தல என்ற பெயரில் புதிய படம் கமிட்டாகி இருப்பதாக போஸ்டர் வெளியிட்டார்.

கிருஷ்ணா இயக்க கௌதம் கார்த்திக்கும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.  இந்நிலையில் தமிழில் வெளியான வல்லவன் திரைப்படத்தின் மூலம் இணைந்த ஜோடி தான் சிம்பு மற்றும் நயன்தாரா. இதன்பின் இவர்கள் இருவரும் காதலில் ஈடுபட்ட, அதன்பின் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததை நாம் அறிவோம். ஆனால் காதல் முறிவிற்கு பிறகு இருவரும் இணைந்து சில ஆண்டுகளுக்கு முன் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான இது நம்ம ஆளு திரைப்படத்தில் ஜோடிகளாக நடித்திருந்தனர்.

இந்நிலையில் ரசிகர்களுக்கு சப்ரைஸ் கொடுக்கும் வகையில், மீண்டும் இந்த ஜோடி இணையவுள்ளதாம். ஆம் ராம் இயக்கத்தில் சிம்பு நடிக்க போவதாக கூறப்படும் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க போவதாக தெரிவிக்கின்றனர். ஆனால் இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.