நடிகர் சிம்பு தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஒரு கலைஞன். நடிப்பை தாண்டி பாடல் பாடுவது, எழுதுவது, இயக்கம், இசை என பல துறைகளில் தனது திறமையை நிரூபித்துள்ளார். ஆனாலும் அவரால் சினிமாவில் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டே இருக்க முடியவில்லை.ஏதாவது ஒரு பிரச்சனை வந்துவிடுகிறது, அதையும் அவர் தைரியமாக எதிர்கொண்டு தான் வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற திரைப்படம் வெளியானது.
90எம்எல், மஹா உள்ளிட்ட திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். நடிகர் சிம்பு இந்த வருடம் அவரது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷத்தை கொடுத்து வருகிறார். இந்த லாக்டவுனை பயன்படுத்தி உடல் எடை குறைத்து பழையபடி உள்ளார். எல்லா சமூக வலைதளங்களிலும் மீண்டும் வந்தது எல்லம் வைரலாக பேசப்பட்டது. அதோடு அடுத்தடுத்து ஈஸ்வரன், மாநாடு என படப்பிடிப்புகளை முழுமையாக முடித்தார்.
அண்மையில் அவர் பத்த தல என்ற பெயரில் புதிய படம் கமிட்டாகி இருப்பதாக போஸ்டர் வெளியிட்டார். கிருஷ்ணா இயக்க கௌதம் கார்த்திக்கும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். தற்போது இப்படம் குறித்து ஒரு தகவல், அதாவது ரசிகர்களின் ஆசை நாயகியான பிரியா பவானி ஷங்கர் இப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வருகின்றன.