சிம்பிளாக தனது காதலியை திருமணம் செய்த நடிகர் விஷ்ணு விஷால்! வெளியான புகைப்படங்கள் இதோ!

கொரோனா தொற்று காரணமாக உலகெங்கும் லாக்டவுன் போடப்பட்டது. பிரபலங்கள் பலரும் அவர்களது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். லாக்டவுன் நேரத்தில் சினிமா பிரபலங்கள் பலரும் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க ஆரம்பித்துள்ளனர். படங்களுக்காக பிஸியாக இருந்த சினிமா பிரபலங்களுக்கு இது பொன்னான காலம் என்றே கூறலாம்.

பலருக்கு இந்த லாக் டவுனில் திருமணம் நடந்துள்ளது, சிலருக்கு குழந்தை பிறந்துள்ளது. பிரபலங்களின் அந்த சந்தோஷ செய்தியையும் நாம் பார்த்து தான் வருகிறோம். இந்த நிலையில் இன்னொரு பிரபலத்தின் மறுமண தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் விஷ்ணு விஷால் சிம்பிளாக மறுமணம் செய்து கொண்டார். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் விஷ்ணு விஷால்.

அதன் பின்னர் நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஷ்ணு விஷால் நீண்ட நாளாக காதலித்து வந்த விளையாட்டு வீராங்கனை கட்டா ஜுவாலா என்பவரை அவரது பிறந்தநாளான இன்று சிம்பிளாக மோதிரம் மாற்றிக் கொண்டு மறுமணம் செய்து கொண்டார். அந்த புகைப்படங்களை ஷேர் செய்து விஷ்ணு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.