சிம்பிளாக கணவருடன் திருமணநாள் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! குவியும் வாழ்த்துக்கள்..

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. தமிழில் மட்டுமல்ல தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக விளங்கும் இவருக்கு, ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் தான். பானா காத்தாடி படத்தின் மூலம் பிரபலமாகியவர். தற்போது முன்னணி நடிகரான விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோருடன் இணைத்து நடித்து வருகிறார். இவர் தெலுங்கு சினிமா நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

2017ம் ஆண்டு இவர்களது திருமணம் கோலாகலமாக கோவாவில் நடந்தது. திருமணம் ஆனதில் இருந்து இருவரும் தங்களது பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அந்த வகையில் அடுத்தடுத்த அவரது நடிப்பில் வெளிவர பல படங்கள் வெயிட்டிங். நடிகை சமந்தா தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் எனும் படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி இருக்கிறார்.

சமந்தா அண்மையில் கூட ஆடைகளுக்கான ஆன்லைன் ஷாப்பிங்கை தொடங்கினார். இன்று சமந்தா-நாக சைத்தன்யாவுக்கு திருமண நாள், அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர். சமந்தாவும் கணவருடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் போட்டு வாழ்த்து கூறியுள்ளார். இதோ அவரது பதிவு…

 

 

View this post on Instagram

 

You are my person and I am yours , that whatever door we come to , we will open it together . Happy anniversary husband @chayakkineni ❤️

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

Leave a Reply

Your email address will not be published.