சின்னத்திரை நடிகை ஆல்யா மானசாவின் முன்னாள் காதலனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- அழகிய ஜோடி புகைப்படம் இதோ

விஜய் டிவியில் ராஜா ராணி என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரமபலமடைந்தவர் நடிகை ஆல்யா மானஸா. இவர் விஜய் தொலைக்காட்சியில் வருவதற்கு முன்பே கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார்.

ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் இவருக்கு தினமும் ஒரு பரிசு வருமாம்.சில பரிசுகளை வீடியோ எடுத்து ஆல்யா வெளியிடுவார், இப்படி மக்களால் அதிகம் கவனிக்கப்படும் இவர் முதலில் மானஸ் என்பவரை காதலித்து வந்தார். பின் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட பிரிந்தனர், தற்போது ஆல்யா மானசா, சஞ்சீவை காதலித்து வருகிறார்.

மானஸும்-சுபிக்ஷா என்பவரை காதலித்தார், இந்த தகவல் ஏற்கெனவே வந்தது தான். இப்போது என்ன விஷயம் என்றால் மானஸ்-சுபிக்ஷ இருவரின் நிச்சயதார்த்தம் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் மிகவும் சிம்பிளாக கடந்த வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. அன்று இரவே மானஸின் பிறந்தநாள் கொண்டாட்டமும் நடந்துள்ளது. அந்த இளம் ஜோடிகளின் புகைப்படம் இதோ, மேலும் இந்த புகைப்படம் வைரலாக பரவியது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!