சினேகா- பிரசன்னா வீட்டு விசேஷத்தில் கலந்துகொண்ட தனுஷின் அக்கா! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்- இதோ!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் தனுஷ். இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்பு துறைக்கு அறிமுகமானார். அதன் பின்னர் காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதையை கண்டேன், புதுப்பேட்டை போன்ற பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார். தனுஷ் தற்போது சற்றும் இடைவெளி விடாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

ஜகமே தந்திரம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் தன் அடுத்த படமான கர்ணன் படத்தையும் கிட்டத்தட்ட நடித்து முடித்துவிட்டார் அவர். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான அசுரன் என்ற திரைப்படம் வெளியான ஒரு மாதத்திற்குள் 100 கோடி ரூபாய் வசூலித்ததற்காக 100 கோடி கிளப்பில் நுழைந்தது. தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத நடிகைகளில் ஒருவர் சினேகா. மார்க்கெட் இருந்தவரை தமிழ்-தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நல்ல படங்கள் நடித்துள்ளார்.

அண்மையில் கூட அவரது நடிப்பில் பட்டாஸ் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. நடிகை சினேகாவின் நடிப்பும் படத்தில் அதிகம் பாராட்டப்பட்டது. சினேகா-பிரசன்னா இருவரும் தங்களது மகளின் முதல் பிறந்தநாளை மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடினார்கள், புகைப்படங்கள், வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். தற்போது அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சினேகா, பிரசன்னாவுடன், தனுஷின் அக்காவும் தனது கணவருடன் கலந்துகொண்டிருக்கிறார். இதோ அந்த புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!