நகைச்சுவை நடிகர் கவுண்டமணி சினிமாவில் தொடர்ந்து நடிக்காததற்கு இதுதான் காரணமாம்! வெளியான உண்மை தகவல்..

தமிழ் சினிமாவின் காமெடி கிங் என்று அழைக்க பெற்றவர் காமெடி நடிகர் கவுண்டமணி. 80 – 90 களில் நகைச்சுவை என்றாலே அனைவர் நினைவிருக்கும் வருவது கவுண்டமணி செந்தில் தான். இவர்களின் வாழைப்பழம் காமெடி இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளது. ஒரு காலத்தில் ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் பெற்ற நடிகர்களில் இவரும் ஒருவர்.

கவுண்டமணி மற்றும் செந்தில் கூட்டனி சொல்லவே தேவையில்லை அந்த அளவுக்கு இவர்கள் காமெடி நடிப்பு மக்களுக்கு அவ்வளவு புடிக்கும். இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், கார்த்திக் என பலருடன் நடித்துள்ளார். காமெடி நடிகர்கள் பலர் இப்போது வந்துவிட்டார்கள். ஆனால் அந்த காலத்தில் செந்திலுடன், கவுண்டமணி கொடுத்த காமெடி காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு இதுவரை எந்த காமெடியும் வரவில்லை என்றே கூறலாம்.

கவுண்டமணி சுமாரான நடிகருடன் இணைந்து நடித்தாலும் அப்படம் செம ஹிட்டாகிவிடும் என்ற அளவிற்கு அவருக்கு பெரிய வரவேற்பு இருந்தது. அப்படிபட்ட நகைச்சுவை நடிகர் கவுண்டமணி அவராகவே சினிமாவில் இருந்து விலகிவிட்டார். காரணம் அவருக்கு வயது காரணமாக அவரது குரலில் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாம். அதோடு முகமும் வசீகரம் இல்லாததால் அவரே ஒதுங்கிக் கொண்டாராம்.

Leave a Reply

Your email address will not be published.