சினிமாவில் அறிமுகமாகும் நடிகர் சந்தானத்தின் மகன்..! – முதல் படமே யார் இயக்கத்தில் நடிக்கிறார் தெரியுமா..?

திரையுலகில் நடிகர் சந்தானம், 2004ம் ஆண்டு சிம்புவின் மன்மதன் படம் மூலமாக காமெடி நடிகராக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.தனது நகைச்சுவை பேச்சுக்கும், டைமிங் பஞ்சுக்கும் பெயர் போன சந்தானம் படிப்படியாக உயர்ந்து தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், தயாரிப்பாளராக உயர்ந்துள்ளார். சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான பிஸ்கோத் திரைப்படம் வசூல் ரீதியாக பெரிதாக வெற்றி பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஜான்சன் கே இயக்கத்தி “பாரிஸ் ஜெயராஜ்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த சமயத்தில் சந்தானத்தின் மகன் நிபுன் திரையுலகில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுவும் முதல் படமே செம்ம பிரம்மாண்டமாக இருப்பதால் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

ஆம்… தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், இயக்குநர், டான்ஸ் மாஸ்டர் என பன்முக திறமை கொண்டவர் பிரபுதேவா. தற்போது இந்தியில் முன்னணி இயக்குநராகவும், டான்ஸ் மாஸ்டராகவும் வலம் வருகிறார்.

அடுத்து பிரபுதேவா இந்தியில் இயக்க உள்ள படத்தில் தான் சந்தானத்தின் மகன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக உள்ளாராம். திரையுலகிற்குள் அடியெடுத்து வைக்க உள்ள குட்டி சந்தானத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.