சித்தி 2 சீரியலில் இருந்து வி ல கு ம் ராதிகா! அவரே வெளியிட்ட உ ரு க் க மான பதிவு.. சோ க த் தி ல் ரசிகர்கள்

சீரியல் தொடரில் மக்கள் மனதில் எப்பொழுதும் நீங்காத இடம்பிடித்த சீரியல் என்றால் அது நடிகை ராதிகாவின் சித்தி சீரியல் தான். அப்போது இருந்து இப்போது வரை ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் சித்தி 2 சீரியல் ஆரம்பமானது. ஆரம்பித்த ஒரு சில மாதங்களில் கொ ரோ னா ப ர வ ல் ஆரம்பிக்க படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து சித்தி 2 சீரியலில் ராதிகாவின் கணவராக நடித்து வந்த பொன்வண்ணன் உள்ளிட்ட சில கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டு மீண்டும் 2020-ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து ஷூட்டிங் தொடங்கியது.

தற்போது இத்தொடரில் கவின் – வெண்பா திருமணம் அதை ஒட்டி நடக்கும் பி ர ச் ச னைகள் ஒளிபரப்பாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, சித்தி 2 சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக சமூகவலைதளங்களில் சமீபகாலமாகவே தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் சித்தி 2 தொடர் தற்போது முடிவடையாது என்று ரசிகர்களிடம் தெரிவித்திருந்தார் ராதிகா. இந்நிலையில், தற்போது இத்தொடரிலிருந்து வி ல கு வதாக நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, “மகிழ்ச்சியும் சோ க மு ம் கலந்த மனநிலையில் இருக்கிறேன். ‘சித்தி 2’ மற்றும் மெகா தொடர்களிலிருந்து இப்போதைக்கு வி ல கு கிறேன்.

எனது கடின உழைப்பை கொடுத்திருக்கிறேன். அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களிடமும், என்னுடன் நடித்தவர்களிடமும் இருந்து சோ க த் து டன் வி டை பெறுகிறேன். ஆனால், சீரியல் தொடர வேண்டும். கவின், வெண்பா மற்றும் யாழினிக்கு வாழ்த்துகள். எனது ரசிகர்களுக்கு என் அன்பு. நி ப ந் த னைய ற் ற அன்புக்கு நன்றி. தொடர்ந்து ‘சித்தி 2’வைப் பாருங்கள். எனது சிறந்த பங்களிப்பு இனிமேல் தான் வரவிருக்கிறது” இவ்வாறு ராதிகா தெரிவித்துள்ளார். மேலும், தனது கணவருடன் முழுநேர அரசியலில் ஈடுபட இருப்பதால் தான் இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக தெரிகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!