சன் தொலைக்காட்சி என்றாலே சீரியல் தான் முதன்மையாக பார்க்கப்படும். எத்தனை சேனல் போட்டிப்போட்டு சீரியல் எடுத்தாலும் சன் டிவி டிஆர்பி மற்ற சேனல்கள் நெருங்க முடியவில்லை. அந்த அளவிற்கு அங்கு சீரியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. சன் தொலைக்காட்சியில் மிக பிரபலமாக ஓடிய சீரியல் தான் சித்தி. தற்போது சித்தி 2 சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. ராதிகா தான் இந்த சீரியலை தயாரித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கு, பொது முடக்கத்தால் சினிமா, சீரியல் துறை மிகவும் பாதிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பின் அண்மையில் சில நிபந்தனைகளுடன் சீரியல் படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள அரசு அண்மையில் அனுமதியளித்தது. சீரியல் என்றதும் முதலில் நினைவுக்கு வருபவர் நடிகை ராதிகா. சின்னத்திரையில் நடித்தும், தயாரித்தும் வரும் இவர் சித்தி 2 சீரியலில் நடித்து வந்தார்.
கொரோனாவால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டத்தில் சித்தி சீரியலில் முந்தய பாகம் ஒளிபரப்பானது. இந்நிலையில் ராதிகாவின் மகள் ரேயான் சீரியல் குறித்து பதிவிட்டுள்ளார். விரைவில் சித்தி 2 சீரியல் ஒளிப்பரப்பாகும் என தெரிவித்துள்ளார். சித்தி 2 சீரியலில் ராதிகாவுக்கு கணவராக நடிகர் பொன் வண்ணன் நடித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு பதிலாக இனி நடிகர் நிழல்கள் ரவி நடிப்பதாக தெரிகிறது.