சித்தி-2 சீரியலில் இனி இவர் தானாம்! அதிரடி மாற்றம்! வெளியான லேட்டஸ்ட் புரமோ!

சன் தொலைக்காட்சி என்றாலே சீரியல் தான் முதன்மையாக பார்க்கப்படும். எத்தனை சேனல் போட்டிப்போட்டு சீரியல் எடுத்தாலும் சன் டிவி டிஆர்பி மற்ற சேனல்கள் நெருங்க முடியவில்லை. அந்த அளவிற்கு அங்கு சீரியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. சன் தொலைக்காட்சியில் மிக பிரபலமாக ஓடிய சீரியல் தான் சித்தி. தற்போது சித்தி 2 சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. ராதிகா தான் இந்த சீரியலை தயாரித்து வருகிறார்.

நடிகை ராதிகா பல வருட காலமாக சின்னத்திரையில் கால்பதித்து சாதித்து வருபவர். அவரின் சீரியல்கள் பிரைம் டைமில் இடம் பெறுவது வழக்கம். அதற்காக ரசிகர்களும், ரசிகைகளும் காத்திருப்பது அனைவரும் அறிந்ததே. அவர் நடித்து வந்த சித்தி 2 சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் தொடங்கியது. ஆனால் கொரோனா ஊரடங்கால் அண்மைகாலமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.

கடந்த சில தினங்களும் சித்தி 2 சீரியல் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளதை ராதிகாவின் மகள் ரேயான் அறிவித்திருந்தார். அதே வேளையில் இத்தொடரில் ராதிகாவின் கணவராக நடித்து வந்த பொன் வண்ணனுக்கு பதிலாக நடிகர் நிழல்கள் ரவி நடிக்கவுள்ளார் என சொல்லப்பட்டு வந்தது. தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக புதிய புரமோ வெளியாகியுள்ளது. சித்தி சீரியல் டைட்டில் பாடல் தற்போது 2 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.