இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கு வெற்றி பெற இன்னும் 309 ரன்கள் தேவை. கையில் 8 விக்கெட்டுகள் உள்ளன. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது ஹனிமா விஹாரியிடம் ரவிசந்திரன் அஸ்வின் தமிழில் பேசினார். 3வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் மற்றும் ஆந்திராவை சேர்ந்த ஹனுமா விஹாரி ஆகியோர் ஜோடி சேர்ந்து பேட்டிங் செய்தனர். அப்போது, விஹாரியுடன் அஸ்வின் தமிழில் பேசினார். கவலப்படாதா. பால் நேரா தான் வரும்.. பத்து பத்து பாலா பார்த்துக்கலாம் என விஹாரியிடம் அஸ்வின் தமிழில் பேசியது தமிழகத்தை சேர்ந்த ரசிகர்களை கவர்துள்ளது.
— Niruban Chakkaravarthi M (@Niruban_be) January 11, 2021