சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆரி ரசிகர்கள் செஞ்ச வேலையைப் பாருங்க… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 99 நாட்களை கடந்து இன்னும் 4 நாட்களுக்குள் நிறைவடைய போகிறது. இதனையடுத்து, ரசிகர்கள் மத்தியில் யார் பிக்பாஸ் டைட்டிலை வெல்லப்போகிறார்கள் என காத்திருக்கின்றனர். பிக்பாஸ் இல்லம் பலரையும் புகழின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது. மூன்று சீசன்களைக் கடந்து பிக்பாஸ் இப்போது நான்காவது சீசனை எட்டிப்பிடித்துள்ளது. சீசன் 4 இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில் ஆரிக்கு மிகவும் நல்ல பெயர் உள்ளது.

இதனால் இந்த சீசனில் ஆரிதான் டைட்டில் வின் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ஆரி அர்ஜுனனுக்கு ரசிகர் பட்டாளம் மிகவும் அதிகம். இந்நிலையில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆரி ரசிகர்படை செய்த ஒரு செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ‘’பிக்பா டைட்டில் வின்னர் ஆரி அர்ஜூனன்..கடவுள் இருக்கான் குமாரு’’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையுடன் ஆரி ரசிகர்கள் போஸ் கொடுத்துள்ளனர்.

இந்தியா_ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடந்துவரும் நிலையில் அங்கு ஆரி ரசிகர்கள் கொடுத்த போஸ் இப்போது வைரல் ஆகிவருகிறது. இதேபோல் கமலஹாசன் பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் ஆரியின் பெயரை ரசிகர்கள் சொல்லிவருவது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published.